வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான போதை மாத்திரைகள் மற்றும் குஷ் எனும் ஒருவகை கஞ்சா போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஜேர்மனி, இங்கிலாந்து, கனடா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இருந்து கொழும்பு, பாணந்துறை, பொரலஸ்கமுவ, பாதுக்க, பிலியந்தலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த போதைப்பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பொதிகளில் 207 போதை மாத்திரைகளும், 750 கிராம் குஷ் கஞ்சாவும் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி சுமார் 13 மில்லியன் ருபாய் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply