மகளிர் உலகக்கிண்ண போட்டிகளின் குழுநிலை போட்டிகள் இடம்பெற்றுவருக்கின்றன. இன்றய போட்டியில் குழு இரண்டில் உள்ள இந்தியா மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதின. உலககோப்பை போட்டிகளில் இதுவரை இந்திய பெண்கள் அணி கோப்பையினை வென்றதில்லை. இறுதி உலககின்ன போட்டித்தொடரில் இறுதி போட்டியில் தோல்வியை தழுவியது. மேற்கிந்திய அணி ஒருமுறை உலககோப்பையை வெற்றிபெற்றுள்ளது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியா அணியின் தலைவி ஹேய்லேய் மத்தியூஸ் முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்ததார். முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணியின் ஸ்டாபானி டெய்லர் பெற்றுக்கொண்ட 40 ஓட்டங்களுடனும் ஷேமன் கேம்ப்பேள்ளே பெற்றுக்கொண்ட 30 ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 06 விக்கட்டடுகளை இழந்து 118 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது மேற்கிந்தியா அணி. இந்திய அணியின் தீப்த்தி சர்மா 03 விக்கட்டுக்களை வீழ்த்தினர். தீப்த்தி சர்மா இன்று வீழ்த்திய 03 விக்கட்டுக்களுடன் தனது T20 போட்டிகளில் 100 வது விக்கட்டினை பதிவுசெய்ததுடன் இந்திய அணி சார்பில் அதிக விக்கட்டுக்களை வீழ்த்திய வீராங்கனையாகவுள்ளார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியில் முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத ஸ்மிர்த்தி மந்தானாவுடன், ஷெபாலி வெர்மா ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஆடுகளம் நுழைந்தனர். இரு அதிரடி வீரர்கள் போட்டியில் பெரிய ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுத்தருவார்கள் என எதிர்பாத்த போதிலும் மந்தானா 10 ஓட்டங்களுடனும் ஷெபாலி வெர்மா 28 ஓட்டங்களுடனும் வெளியேறினார்.
கடந்த போட்டியில் அரைசதம் பெற்ற ரோட்றிகேஸ் 01 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 35 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை இழந்திருந்த இந்திய அணியை தலைவி கௌர் உடன் இணைந்து ரிச்சா கோஷ் சரிவில் இருந்து மீட்டனர். கடந்த போட்டியிலும் ரிச்சா கோஷ் சிறப்பாக துடுப்பெடுத்தடியிருந்தார். கௌர் இனால் பெற்றுக்கொள்ளப்பட்ட 33 ஓட்டங்கள் மற்றும் ரிச்சா கோஷ் இனால் பெற்றுக்கொள்ளப்பட்ட 44 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 80 ஓட்டங்களை நான்காவது விக்கட்டுக்காக இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள 18.1 ஓவர்களில் நான்கு விக்கட்டுக்களை இழந்து 119 ஓட்டங்களை பெற்று ஆறு விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது இந்திய அணி.
மேற்கிந்திய அணி சார்பில் கரிஷ்மா ராம்கராக் 03 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இந்திய மகளிர் அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று குழு இரண்டில் ஓட்ட விகிதசர அடிப்படையில் இரண்டாமிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-ரவிநாத்-