பொதுமக்களிடம் பொலிஸார் விடுக்கும் வேண்டுகோள்!

ஹபராதுவ பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட உனவடுன பகுதியில் உள்ள வோட்டர் கேட் ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய பெண் ஒருவரிடமிருந்து 16,100 அமெரிக்க டொலர்கள், 195,000 ரஷ்ய ரூபிள் மற்றும் 200 யூரோக்களை திருடிய நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இதுவரையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஹோட்டலின் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் தேடப்படும் குறித்த சந்தேக நபர் தெள்ளம்புர வடக்கு – நாகியாதெனிய பகுதியின் வல்பிட்ட கிராமத்தைச் சேர்ந்த சந்தன சமன் குமார எனும் 40 வயதுடைய ஒருவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பான ஏதேனும் தகவல் தெரிந்தால் 076-8477810 எனும் தொலைபேசி இலக்கத்தின் ஊடாக, உனவட்டுன சுற்றுலா பொலிஸ் பிரிவுக்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

பொதுமக்களிடம் பொலிஸார் விடுக்கும் வேண்டுகோள்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version