கடவுச்சீட்டு பெற்று தருவதற்கு லஞ்சம் பெற்ற நால்வர் கைது!

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற 04 பேரை இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அலுவலக உதவியாளர் ஒருவரும் 03 தரகர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுப்பதற்காக இவர்கள் 42,000 ரூபாவை லஞ்சமாக பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடவுச்சீட்டு பெறுவதற்கு 22,000 ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 20,000 ரூபாவை சந்தேகநபர்கள் தம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடவுச்சீட்டு பெற்று தருவதற்கு லஞ்சம் பெற்ற நால்வர் கைது!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version