தபால் வாக்களிப்பு பிற்போடப்பட்டது

தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுளளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்மாதம் 22,23,24 மற்றும் 28 ஆம் திகதிகளில் உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மாற்று திகதியின்றி தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்புக்கான தேர்தல் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் பூர்த்தியாகவில்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அரசாங்க அச்சு திணைக்களம் வாக்குச்சீட்டுகளை அச்சடிக்க பணமில்லை என கூறியுள்ள நிலையில் வாக்களிப்பினை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையிலேயே தேர்தல் ஆணைக்குழு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மார்ச் 09 ஆம் திகதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், அதுவும் பிற்போடப்பபடலாம் என்ற எதிர்பார்ப்பே காணப்படுகிறது.

தபால் வாக்களிப்பு பிற்போடப்பட்டது
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply