முட்டை தட்டுப்பாடு மற்றும் அதிக தேவையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், பொது நுகர்வுக்காக கடைகளில் முட்டைகளை விற்பனை செய்ய அனுமதியில்லை எனவும், வெதுப்பாக தேவைகளுக்கு மட்டுமே இவை பயன்படுத்தப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்ட போதிலும், பறவைக் காய்ச்சல் தொற்றுநோய் காரணமாக இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
எனினும் தற்போது தற்காலிகமாக முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.