சீனாவின் உத்தரவாதமின்றி IMF கடன்?

சீனாவின் கடன் மீள் செலுத்துகை உத்தரவாதமின்றி இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்படுவதாக அமெரிக்க ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வரும் வாரம் நடைபெறவுள்ள G20 நாடுகளின் கலந்துரையாடலில் அமெரிக்க இந்த விடயம் தொடர்பில் பேசவுள்ளதாக அந்த ஊடகம் மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

கடன் வழங்கிய நாடுகள் மற்றும், நிறுவனங்களின் கடன் மீள் செலுத்துகை உத்தரவாதத்தின் பின்னரே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு அனுமதிக்க வழங்கப்படும். இவ்வாறன நிலையில் அதிக கடன்களை இலங்கைக்கு வழங்கியுள்ள சீனாவின் உத்தரவாதம் இதற்கு அவசியமாகிறது. ஆனாலும் அதனை தாண்டி விசேட கொள்கை திட்டத்தின் மூலம் இந்த கடனை இலங்கைக்கு வழங்குவது தொடர்பிலேயே ஆராயப்படுகிறது.

இலங்கையின் கடன் மீள் செலுத்துகை திட்டங்கள் தொடர்பிலான கொள்கைகள் முழுமை பெறாத நிலையில் தற்போது அது பற்றி பேச முடையதெனவும், அது தொடர்பிலானா வேலைத்திட்டங்களில் சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனட் எலன் இந்தியாவில் G20 நாடுகளின் கூட்ட தொடரில் இலங்கைக்கு கடன் வழங்கும் இறுக்கங்களை தளர்த்துவது தொடர்பில் பேசவுள்ளதாகவே அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் உத்தரவாதமின்றி IMF கடன்?
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version