இலங்கைக்கு ஒத்துழைக்க இத்தாலி தயார்!

இலங்கைத் தொழிலாளர்களுக்கு இத்தாலியில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் வகையில் தொழிலாளர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் இத்தாலி இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சுற்றுலாத் துறை முதன்மையான பங்களிப்பை வழங்குவதால், அந்தத் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய தாம் தயார் என்றும் இத்தாலி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு ஒத்துழைக்க இத்தாலி தயார்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version