சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகளை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் இரண்டு இளம் பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பஸ் நேற்று (19.02) இரவு 9.15 மணியளவில் நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள பகுதியில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 26 மற்றும் 30 வயதுடைய இரண்டு யுவதிகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயமடைந்து வட்டவளை, கினிகத்தேனை மற்றும் நோர்டன் பிரதேச வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்ஸின் சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 14 பெண்களும் 11 ஆண்களும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தெலிஜ்ஜவில மற்றும் பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு யுவதிகளே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர்கள் மஹரகம பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாதமலை யாத்திரைக்காக சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
