அதிக விலைகளில் விற்கப்பட்டு வந்த, இறக்குமதி செய்யப்பட்ட பழங்களின் விலைகள் தற்போது சற்று குறைந்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, இலங்கைக்கு அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு, தோடம்பழங்கள் போன்ற பல வகையான பழங்களின் விலைகள் குறைந்துள்ளன.
எனினும் உள்நாட்டு உற்பத்திகளான வாழைப்பழம், பப்பாசி, அன்னாசி போன்ற பழங்களின் விலைகள் இன்னும் அதிக விலையிலேயே விற்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
