அதிக விலைக்கு முட்டை விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த தலவாக்கலையை சேர்ந்த நான்கு வர்த்தகர்களுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தலவாக்கலை நகரில் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு சில வியாபாரிகள் முட்டைகளை விற்பனை செய்வதாக கிடைத்த முறைப்பாட்டின் பேரிலேயே இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தகர்கள் சிவப்பு முட்டை ஒன்றை 50 ரூபாவுக்கும், வெள்ளை முட்டை ஒன்றை 48 ரூபாவுக்கும் விற்பனை செய்துள்ளனர்.

மேலும் இந்த வர்த்தகர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், இம்மாதம் 28ம் திகதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 44 ரூபாய் மற்றும் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 46 ரூபா என நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி அறிக்கை வெளியிடப்பட்டபோதிலும், இவ்வாறான குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு முட்டை விற்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

Social Share

Leave a Reply