அவுஸ்திரேலியா மகளிர் ஆதிக்கம் தொடர்கிது

T20 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு எட்டாவது தடவையாக நடப்பு சம்பியனான அவுஸ்திரேலியா மகளிர் அணி தெரிவாகியுள்ளது.

தென்னாபிரிக்கா, கேப் டவுனில் இந்தியா மகளிர் அணியை 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா அணி தெரிவானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா மகளிர் அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி ஓட்டங்களை உயர்த்தி இந்தியா அணிக்கு கடினமென இலக்கை நிர்ணயித்தது.

அலீஷா ஹீலி, பெத் மூனி ஆகியோர் 50 ஓட்டங்களை முதல் விக்கெட் இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். அலீஷா ஹீலி 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அணி தலைவி மெக் லென்னிங் உடன் ஜோடி சேர்ந்த பெத் மூனி 54 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இருவரும் 36 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டமாக மெக் லென்னிங், ஆஷ்லெஜி கார்னர் ஆகியோர் 53 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். மெக் லென்னிங் 49 ஓட்டங்களை பெற்ற அதேவேளை, ஆஷ்லெஜி கார்னர் 31 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

இந்தியா அணியின் பந்துவீச்சில் ஷிகா பாண்டே இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்தியா அணி இந்த ஓட்டங்களை பெறுவது கடினம் என்ற நிலையில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. ஆரம்ப விக்கெட்கள் இரண்டும் வேகமாக இழக்க வாய்ப்பிலை என்ற நிலை மாறியது. சிறிது நேரத்திலும் மூன்றாவது விக்கெட் வீழ்த்தப்பட்ட இந்தியா அணி படு தோல்வி என்ற நிலை உருவானது.

ஆனால் ஜெமிமா ரொட்ரிகஸ், அணியின் தலைவவி ஹன்ப்ரீட் கோர் ஆகியோர் இணைந்து இந்தியா அணியினை மீது எடுத்தனர். ஜெமிமா 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்தும் போராடிய கோர், ரிச்சா கோஷுடன் 33 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அவுஸ்திரேலியோ அணி இலகுவாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தீப்தி ஷர்மாவும் இறுதிவரை போராடினர்.

இறுதி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், முதல் இரு பந்துகளில் அவர் 4 ஓட்டங்களை பெற்று விட்டு மூன்றாவது பந்தில் ஒரு ஓட்டத்தை பெற்றது அவுஸ்திரேலியா பக்கமாக வாய்ப்பை மாற்றியது. அடுத்த பந்தில் விக்கட், புதிய வீராங்கனை ஒரு ஓட்டம், இறுதிப் பந்தில் நான்கு ஓட்டமென போட்டி நிறைவுக்கு வந்தது. இறுதி நான்கு பந்துகளையும் ரிச்சா ஷர்மா எதிர்கொண்டிருந்தால் சிலவேளைகளில் வாய்ப்பு இந்தியா அணிக்கு கிடைத்திருக்கலாம்.

இந்தியா அணி கடந்த முறை மாத்திரமே இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. இந்த முறை இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்தியா அணி போராடி வாய்ப்பை இழந்துள்ளது.

சிறப்பாக துடுப்பாடிய அணியின் தலைவி கோரின் ரன் அவுட் ஆட்டமிழப்பும் இந்தியா அணிக்கு பின்னடைவை வழங்கியது.

அவுஸ்திரேலியா மகளிர் ஆதிக்கம் தொடர்கிது
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version