தனியார் பேரூந்துகளும் நாளை வேலை நிறுத்தத்தில்!

இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் நாளைய தினம் பாரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை முன்னடுக்க திட்டமிட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் குறிப்பிட்ட ஒரு சில பேரூந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டாலும் ஏனைய அனைத்து தனியார் பேரூந்து சேவைகளையும் வழமைபோல் இயக்க பொது பேரூந்து சங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், பாடசாலை சேவையில் மற்றும் அலுவலக சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நாளைய தினம் சேவையில் ஈடுபடாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கொவிட் -19 தொற்று நோய்தொற்று நேரத்தில் கூட அரச ஊழியர்கள் முழுமையான சம்பளத்தை பெற்றனர். அதேசமயம் தனியார் துறை மற்றும் தனியார் பேரூந்து சேவையில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதியத்தில் பாதியை கூட சரியாக பெற முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனியார் பேரூந்து சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளம் தொடர்பிலான கோரிக்கைகளை முன்வைக்கும் அதேவேளை, மக்களுக்கு எந்தவொரு இடையூறும் இல்லாத வகையில் இந்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தனியார் பேரூந்துகளும் நாளை வேலை நிறுத்தத்தில்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version