தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் புதுப்பித்தல் கட்டணத்தை உயர்த்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஆரம்ப பதிவுக் கட்டணமான 15,000 ரூபா, 35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய கட்டணம் 50,000 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், பதிவு புதுப்பித்தல் கட்டணமான 10,000 ரூபா, 15,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 25,000 ரூபாயாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் உரிமம் காலாவதியான முதல் மாதத்திற்கு தாமதக் கட்டணம் 10,000 ரூபாயாகவும், உரிமம் முடிந்த 31-90 நாட்களில் தாமதக் கட்டணம் 25,000 ரூபாயாகவும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 90 நாட்களுக்குப் பிறகு தாமதக் கட்டணம் 35,000 ரூபாயாக அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் கடந்த மாதம் 20ம் திகதி முதல் அமுலுக்கு வரவேண்டியவை எனவும் வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version