டொலர் வலுப்பெற்றதால், பொருட்களின் விலைகளில் மாற்றம்!

புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது.

ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை 95 ரூபாவாக உள்ளதாக அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 130 ரூபாவாக காணப்பட்டது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலையும் குறைவடைந்துள்ளது. கடந்த வாரம் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை தற்போது 130 ரூபாவாக குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக வலுவடைந்துள்ளமையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 352 ரூபா 72 சதங்களாகவும் விற்பனை பெறுமதி 362 ரூபா 95 சதங்களாகவும் காணப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த 2022 மே 4ம் திகதிக்கு பின்னர் ஒரு டொலருக்காக பெறப்பட்ட குறைந்தபட்ச ரூபாவின் பெறுமதியே இது என பதிவாகியுள்ளது.

டொலர் வலுப்பெற்றதால், பொருட்களின் விலைகளில் மாற்றம்!

Social Share

Leave a Reply