இலங்கையின் விசேட விமானம் மூலம் 117 சீன சுற்றுலாப் பயணிகள் நேற்று (01.03) இரவு இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சாங் ஹொங், சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, மற்றும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, உள்ளிட்டோர் சீன சுற்றுலாப் பயணிகள் குழுவை வரவேற்பதற்காக வருகை தந்திருந்தனர்.
உலகின் அதிக சனத்தொகையை கொண்ட சீன தேசத்திலிருந்து 1% மக்கள் தொகை வந்தாலும் எமது நாட்டின் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் தொடரும் பணிப்புறக்கணிப்புகளால், போராட்டங்களால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், 210,184 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். 162 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருவாய் ஈடுபட்டுள்ளது.
