இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் தாம் பங்கேற்பதாக சீனப் பிரதமர் லீ கியாங் அறிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜியோஜீவாவுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து பேசிய அவர், இதற்கு ஏனைய தரப்பினரின் பங்கேற்பும் அவசியம் என தெரிவித்துள்ளார்.
இலங்கை மட்டுமன்றி பொருளாதார நெருக்கடியில் உள்ள ஏனைய நாடுகளும் சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு நட்புறவை கருத்திற்கொண்டு இலங்கை சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனை மீள்செலுத்த ஏதுவான காலம் தொடபில் கலந்துரையாட திட்டமிட்டுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் சுமையில் 52% வீதமானவை சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கையின் கடனுதவி விண்ணப்பத்திற்கு ஆதரவளிப்பதாக சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி உறுதியளித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறுகிய கால கடன் வசதிகளை செலுத்துவதற்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவது குறித்தும் சீனா கவனம் செலுத்தியுள்ளது.
