தென் மாகாணத்தில் சுனாமி அனர்த்த அபாய பாடசாலைகளை ஆரம்பப் புள்ளியாகக் கொண்டு சுனாமி அனர்த்த ஆயத்த பயிற்சித் திட்டம் இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இன்று சுனாமி அனர்த்தம் தொடர்பில் ஆபத்து முன்னறிவிப்பு கிடைத்தால், அதன் உண்மை தன்மை குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் கேட்டறிந்து கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அனர்த்தத்திற்கு முந்திய எச்சரிக்கை அல்லது நம்பத்தகாத செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மாத்தறை கம்புருகமுவ இடைநிலைக் கல்லூரி மற்றும் காலி மாதம்பகம மத்திய மகா வித்தியாலயம் மற்றும் குமார காஷ்யப்ப கல்லூரி ஆகியவற்றில் சுனாமி ஒத்திகைகள் இன்று இடம்பெறவுள்ளது.