அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது.
நேற்று (02.03) 6 ரூபாவால் வீழ்ச்சியடைந்த டொலரின் பெறுமது இன்று (03.03) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தகவலின்படி, டொலரின் இன்றைய கொள்வனவு விலை 334.50 ரூபாவாகவும் விற்பனை விலை 348.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் உலக வங்கியினால் இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகை கிடைக்கின்றமை, இறக்குமதி கட்டுப்பாடுகள், ஏற்றுமதி அதிகரிப்பு, சுற்றுலா பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது இடைநிறுத்தப்பட்டமை, பணம் அச்சிடப்படாமை உள்ளிட்ட காரணிகளினால், இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருவதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.