இன்று (04.03) காலை 09 மணி முதல் நாளை (05.03) நண்பகல் 12 மணி வரைவெல்லம்பிட்டிய சந்தியிலிருந்து கொலன்னாவ சந்தி வரையான வீதி மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து சபையின் மேற்பார்வையில் ஒரு தனியார் நிறுவனத்தால் நிலத்தடி நீர் குழாய் கட்டமைப்பின் பணிகள் முன்னெடுக்கப்படவிருப்பதால் இவ்வாறு வீதி மூடப்படவுள்ளது.
இதன் காரணமாக சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இயன்றவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
