உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் அபிவிருத்தி பணிகளை நீர்ப்பாசன, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவாட் கொள்ளளவைச் சேர்க்கும் உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் 97 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளது.
மாதத்திற்கு 3 நிலக்கரி கப்பல்களுக்கு செலவிடப்படும் டாலர் தொகையை மிச்சப்படுத்தும் இந்த திட்டம் எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை மக்களிடம் கையளிக்க தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சுதர்சன் தெனிபிட்டிய, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் யு.டி.சி. ஜயலால், உமாஓயா திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் அலகந்த மற்றும் திட்டத்திற்குப் பொறுப்பான ஃபராப் நிறுவன அதிகாரிகள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குழுவினரும் கலந்து கொண்டனர்.