வெதுப்பக பொருட்களின் விலையை குறைப்பதைத் தவிர, நலிவடையும் வெதுப்பக தொழிலை மீட்க வேறு எந்த திட்டமும் இல்லை எனவும், பாணின் விலை 100 ரூபாவாக குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலையை குறைத்தால் மட்டுமே தற்போது முடங்கியுள்ள பேக்கரி தொழிலை மீட்டெடுக்க முடியும் என்றும் இதற்கு அரசாங்கத்தின் உதவியை நாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாண் தற்போது ரூ.150, ரூ.160, ரூ.170, மற்றும் சில பகுதிகளில் ரூ. 180. ரூபாவிற்கு விற்கப்படுகிறது, இதனால் நுகர்வோர் அந்த விலைகளில் வாங்க முடியாது, எனவே பாண் உள்ளிட்ட, வெதுப்பக உணவுகளின் விற்பனை 20 முதல் 25 சதவீதம் குறைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மின்கட்டண உயர்வு காரணமாகவும், வெதுப்பாக தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வெவேறு பிரச்சனைகள் காரணமாக சுமார் 7,000 பேக்கரிகளில், 5,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
