மனதை உருக்கும் இளம் குடும்பத்தின் தற்கொலை!

வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இன்று (07.03) காலை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பெண் குழந்தைகள், தாய் மற்றும் தந்தையே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தந்தை, இரு பிள்ளைகள் மற்றும் மனைவியை கொலை செய்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிவபாதசுந்தரம் கெளஷிகன் (41), அவரது மனைவி கௌ.வரதராயினி (36) (வவுனியா பாடசாலையொன்றின் ஆசிரியை) மற்றும் மைத்ரா வயது9 , கேசரா வயது 3 வயதுடைய இரு பிள்ளைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்காததால், வீட்டிற்கு வந்த நண்பரொருவரே இவர்களின் இந்நிலை கண்டு வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனைவருடனும் நட்பாக பழகும் திறன் கொண்டவர் எனவும், தன் மனைவி மக்கள் மீது அதிக பாசம்கொண்ட குடும்ப தலைவன் இவ்வாறான விபரீத முடிவினை எடுக்க கரணம் என்ன என்பதை தாம் அறியவில்லை என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தற்கொலை செய்துகொண்ட கெளஷிகன், வவுனியா மண்ணின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் எனவும், தன் பாடசாலை காலங்களில் அதிக திறமைகொண்ட மாணவன், மாணவத் தலைவன், பேண்ட் வாத்தியக்குழுவின் தலைவன் மற்றும் பாடசாலை கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த தலைவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளதுடன், இவரது இந்த முடிவு அவர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மனதை உருக்கும் இளம் குடும்பத்தின் தற்கொலை!

Social Share

Leave a Reply