சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கேகாலை விளக்கமறியலில் இருந்து தப்பிச் சென்ற முயன்ற கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சிறைச்சாலை அதிகாரிகளால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
