பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
ஏழு மாடி கட்டிடத்திலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக
அப்பகுதியில் உள்ள தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சந்தை பகுதியில், கட்டிடங்கள், தளபாடங்கள் விற்கும் பல கடைகள், வாகனங்கள் என இந்த வெடிப்பு சம்பவத்தில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளது.
வெடிவிபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை, என்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
