போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்கள் அச்சடிக்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

700, போலி 5000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் இந்த நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேக நபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

Social Share

Leave a Reply