சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின் பிங், 3வது தடவையாகவும் அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சீன வரலாற்றில் மிகச் பலமிக்க ஜனாதிபதியாக இவர் விளங்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக மேலும் 5 வருடங்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் ஷி ஜின் பிங் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், 3வது தடவையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
சீனாவின் பிறப்பு வீதத்தில் ஏற்பட்ட சரிவு முதல், பூஜ்ய கோவிட் கொள்கைக்காக அசரங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டது வரை பல சவால்களுக்கு முகங்கொடுத்து தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் நாட்களில் நியமிக்கப்படவுள்ள பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
69 வயதான ஷி ஜின் பிங், 2012ம் ஆண்டு முதல் சீன ஜனாதிபதியாக பதவிவகிக்கின்றார்.
