பொலன்னறுவை பிரதேசத்தில் ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள மனைவியிடம் பணம் பெற்றுக்கொள்வதற்காக, குழந்தையை அடித்து, அக்குழந்தை வலியால் துடிதுடித்து அழும் காணொளி பதிவை மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பகமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய மகேஷ் ரொஹான் என்பவரே இந்த சம்பவம் தொடர்பில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (10.03) ஹிகுரகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குழந்தையின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு குழந்தை பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பக்கமூனா பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
