எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (10.03) இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஒன்றுகூடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 15ம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள ஒன்றிணைந்த தொழிற்சங்கப் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக இது மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
