கண்டி அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11.03) காலை மீட்கப்பட்டுள்ளது.
26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகளை தேடி கிடைக்காத காரணத்தால் அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கும், பொலிஸாருக்கும் அறிவித்திருந்தேன், ஆனால் எனது மகளுக்கு இவ்வாறு நேர்ந்திருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை என உயிரிழந்த யுவதியின் தாயார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
