‘விளையாட்டு துறையில் பெரும் மாற்றங்கள் செய்ய தயார்’ – ரொஷான் ரணசிங்க-

ஓர் விளையாட்டை, குழுவை உருவாக்கும்போது எதிர்கொள்ள வேண்டிய பல சவால்கள் எண்ணிலடங்காதவை அதை நான் அறிவேன். விளையாட்டை செய்வோம், விளையாடச் செய்வோம். இதுவரை நான் எந்த விளையாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எதிர்காலத்திலும் அதை செய்வதாய் இல்லை என என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் இந்த அதிகாரிகள் செய்ய வேண்டிய ஊழல் மோசடிகளை எல்லாம் செய்துவிட்டு சர்வதேச அமைப்புகளின் முன் சென்று “அரசியல் செல்வாக்கு” ​​என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். இது தேசத்துரோகம் மற்றும் துரோகச் செயல் என்பதை அவர்கள் உணர வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நேற்று (10.03) இடம்பெற்ற விசேட தேவையுடையோருக்கான கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதாக அமைச்சர் அறிவித்த சந்தர்ப்பத்திலேயே இதனை தெரிவித்துள்ளார்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் விளையாடும் உரிமைக்காக வாதிடுவதன் மூலம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அமைப்பாகும்.

இந்த அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில், சிறப்புத் தேவையுடையோரின் வேண்டுகோளுக்கு இணங்க, 1973ம் ஆண்டின் 25ம் இலக்க விளையாட்டுச் சட்டத்திற்கு 14 டிசம்பர் 2022 அன்று ஆணைகளைப் பிறப்பித்தோம்.

எதிர்காலத்தில் விளையாட்டுச் சட்டத்தின் மூலம் அனைவரும் தங்கள் உரிமைகளைப் பெறுவீர்கள் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் உருவாக்கும் எந்தவொரு விளையாட்டுக் கழகத்துக்கும் தேவையான தேவையான வசதிகளை சட்டரீதியாக வழங்க நான் முநிற்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

விசேட தேவையுடைய துடுப்பாட்ட வீரர்களின் உலகக் கிண்ணத்தை இலங்கையில் நடாத்த ஏற்பாடு செய்தால் அது எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கு அமைச்சின் பூரண ஆதரவை வழங்குவதற்கு நாம் செயற்பட்டு வருவதக்கவும், போட்டியில் வெற்றி பெற்றதை கவுரவிக்கும் வகையில் தேசிய விளையாட்டு நிதியத்தினால் கோரப்பட்ட 30 இலட்சம் ரூபா வழங்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், பல விளையாட்டு சங்கங்கள் தேவையில்லாமல் பணத்தை செலவிடுகின்றனர், அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தைச் சேர்ந்த 20 அதிகாரிகள் பயணித்துள்ளனர், நாளொன்றுக்கு ஒருவருக்கு $700 ரூபாய் செலவிடப்பட்டது.

இலங்கை ஒலிம்பிக் சங்கம் ஆசிய ரக்பி யூனியனிடம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்களை பேசி சரி செய்யாவிட்டால் இலங்கைக்கு பெரும் அவப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் விளையாட்டு சங்கங்கள் சர்வதேச சங்கங்களின் கிளைகளாக கருதப்படுகின்றன. தேசியம் என்ற வார்த்தை கூட மறந்து போயுள்ளார்கள், சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள்
தங்களது வேலையை சரியாக செய்தால் இவ்வாறான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு அமைச்சு என்ற வகையில் எங்களிடம் தேவையான ஆதரவும் கொள்கைகளும் உள்ளன, உங்களுக்கான சரியான தீர்வுகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். அதற்காக உழைத்து வருகிறோம் என அமைச்சர் ரோஷன் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ​​முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ரங்கா, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே. மஹேசன், விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் அமல் எத்ரிசூரிய, விசேட தேவையுடைய கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மற்றும் பயிற்சியாளர் நுவன் சொய்சா உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

'விளையாட்டு துறையில் பெரும் மாற்றங்கள் செய்ய தயார்' - ரொஷான் ரணசிங்க-

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version