உழைக்கும் மக்களின் உரிமைகளை வென்றெடுத்து கொடுப்பதற்காக மே தினத்தை மிக விமரிசையாக கொண்டாட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஆரம்ப சுற்று பேச்சுவார்த்தை கடந்த 7 ஆம் திகதி நடைபெற்றதாகவும், மே தினம் தொடர்பான ஏற்பாடுகளை செய்ய குழு ஒன்று நியமிக்கப்பட்டு தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டத்தை நடத்த காலிமுகத்திடல், கெம்பல் மைதானம், நுகேகொடை ஆகியே மூன்று இடங்களில் ஒன்றை தெரிவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உழைக்கும் மக்களை விட உழைக்காத மக்களின் எண்ணிக்கை அதிகம், இதன் காரணமாக நாட்டுக்கு இந்த இக்கட்டான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், உழைக்காத மக்களை உழைக்கும் மக்களுடன் சேர்த்து உழைப்பதற்கான உந்துதலை ஏற்படுத்தி நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்பதே பொதுஜன பெரமுனவின் எதிர்பார்ப்பு என சுட்டிக்காட்டியுள்ளார்.