நாட்டின் பல பகுதிகளில் இன்று (16.03) நிலவும் காற்றின் நிலை ஆரோக்கியமற்றதாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று முற்பகல் 11.30 மணி அளவிலான நிலவரப்படி, நாட்டின் மிக மோசமான காற்று நிலை கொழும்பு நகரில் பதிவாகியுள்ளதுடன், காற்றின் தர மதிப்பு சுட்டெண் 135 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், கம்பஹா நகரின் காற்றின் தரநில 130 அலகுகளாகவும், யாழில் 128 அலகுகளாகவும், பதிவாகியுள்ளன.
மேலும், காற்றின் தரக் குறியீட்டின்படி, 101 – 150 அலகுகள் ஆரோக்கியமற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.