கொக்கல பிரதேசத்தில் கண்டியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் காருடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொக்கல உர களஞ்சியசாலைக்கு அருகில் உள்ள புகையிரத கடவையின் ஊடாக கவனக்குறைவாக பயணிக்க முற்பட்ட கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து, 200 மீற்றர் தூரம் வரை புகையிரத்துடன் கார் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய காருக்குள் இருந்த இருவரை காப்பாற்ற அப்பகுதி மக்கள் பெரும் முயற்சி மேற்கொண்டபோதிலும் அது கைகூடவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.