சிவனொளிபாதமலை பகுதியில் லிஸ்டீரியா நோய் தொற்று பரவுதல் குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும், இது தொடர்பாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் சமூக மருத்துவப் பதிவாளர் வைத்தியர் நவீன் சொய்சா தெரிவித்தார்.
நோய் தொற்று தொடர்பில் தகவல் பதிவாகியுள்ள சிவனொளி பாதமலை பகுதியை மையமாக கொண்டு தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதக்கவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோய் தொற்று காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தாலும், இதுவரையில் ஒரு மரணம் மட்டுமே லிஸ்டீரியாவால் ஏற்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், மேலும் இரண்டு சந்தேகத்திற்கிடமான மரணங்கள் பதிவாகியுள்ள போதிலும், அவை குறித்த நோய் தொற்று காரணமாக ஏற்பட்டதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.