வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குவைட் நாட்டில் வேலை பெற்று தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு குவைத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி 4,50,000 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மக்களின் இக்கட்டான சூழ்நிலைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பணம் பெற்று ஏமாற்றும் இவ்வாறானவர்கள் தொடர்பிலான சம்பவங்கள் அண்மைய நாட்களாக அதிகமாக பதிவாகி வருவதால், மக்கள் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.