இலங்கை வான் வெளியில் விபத்துக்கள் குறித்து ஆய்வு செய்யவென, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப்போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது .
இதன்படி விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளும் குழுவின், முதல் தொகுதிக்கான நியமனக்கடிதங்கள் நேற்று (16.03) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
விமான விபத்து புலனாய்வாளர்கள் ஏழு பேர் அமைச்சிடமிருந்து நியமனக்கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை வான்வெளியில் எதிர்காலத்தில் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் முகமாக, துல்லியமான காரணத்தைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவே இக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.