அடுத்த பொலிஸ் மா அதிபராகும் தேசபந்து தென்னகோன்!

தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன ஓய்வு பெறுவதை அடுத்து, மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை காவல்துறையின் 36ஆவது பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நியமிப்பதற்கு ஜனாதிபதி அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பதவியிலிருக்கும் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்ன எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி ஓய்வு பெறவுள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள நாலந்தா கல்லூரியில் கல்வி பயின்ற தென்னகோன், 1998 ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டார், அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்தப்பட்டதுடன், 2015ம் ஆண்டு பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

2019 ஆம் ஆண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட அவர், மூன்று வருடங்களுக்கு மேலாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வருகிறார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version