பங்கபந்து கோப்பை சர்வதேச த்ரோபால் போட்டி 2023 பங்களாதேஷ் த்ரோபால் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள ஷேக் ரசல் உள்ளக விளையாட்டு அரங்கில் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் இந்தியா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்றன.
குறித்த, சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்களாதேஷ் தேசிய அணி தோற்கடித்து, 20 வயதுக்குட்பட்ட இலங்கை அணி வெற்றி பெற்றது.
பலம் வாய்ந்த இந்திய அணியை ஆரம்ப சுற்றில் இலங்கை அணி தோற்கடித்ததே இந்த தனித்துவமான வெற்றிக்கு வழிவகுத்தது.
பெண்கள் பிரிவில் ஆரம்ப சுற்று ஆட்டத்தில் பங்களாதேஷ் தேசிய அணியை இலங்கை அணி தோற்கடிக்க தேர்ச்சி பெற்றனர்.
பங்கபந்து சர்வதேச த்ரோபால் போட்டிகளில் வெற்றிக்கிண்ணத்தை தம் வசப்படுத்திக்கொண்ட 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணி மற்றும் போட்டியில் பங்கேற்ற பெண்கள் அணியினர் எதிர்வரும்
21.03.2023 அன்று AI 273 விமானத்தில் நாட்டை வந்தடையவுள்ளனர்.