பண்டாரவளையில் மண்சரிவு – பலர் பாதிப்பு!

தொடர் மழை காரணமாக பண்டாரவளை – பூனாகலை, கபரகலையில் தொடர் குடியிருப்புகளில் நேற்று(19 .03) இரவு 9 மணியளவில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக இதுவரையில் 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவில் காயமடைந்த 6 பேர் (3 பெண்கள், 3 ஆண்கள்) உடனடியாக பொதுமக்களால் மீட்கப்பட்டு கொஸ்லாந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடைகள் மற்றும் குடியிருப்புகள் சில முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அப்பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

மண்சரிவு ஏற்பட்ட தொடர் குடியிருப்புகளைச் சேர்ந்த 300 பேர் பாதுகாப்பு காரணமாக தற்காலிகமாக பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version