இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு!

களுத்தறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு மாவட்டத் தலைவர் எம். எம். எம் ஜௌபர் தலைமையில் நேற்று முன்தினம் (18.03) தினம் கொழும்பு ஸம் ஸம் நிறுவன கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இலங்கைக்கான பலஸ்தீன நாட்டு தூதுவர் கலாநிதி ஸுஹைர் எம் எச் டார்ட் செய்ட் பிரதம அதிதியாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் முஸ்லிம் லீக்கின் வரலாறு தொடர்பாக அதன் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என் எம் அமீன் குறிப்புரை நிகழ்த்தியதோடு,ஊக்குவிப்பு மனித வள மேம்பாட்டு பேச்சாளர் அஷ்ஷெய்க் யாஸிர் லாஹிர் நளீமி,கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் கலாநிதி எம் டி எம் மஹீஸ் மற்றும் பாராளுமன்றத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் எம் அஜிவதீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

களுத்தறை மாவட்ட சமூகப் பிரச்சினைகளை அடையளம் கண்டு ஆறு மாதங்களுக்குட்பட்ட நான்கு சமூக குழு ஆய்வு செயற்திட்டமும்(Community Need Assessment) இதன் போது வளவாளர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

களுத்துறை மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்கற்கைகளில் ஈடுபடும் இளைஞர் யுவதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.

இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ மற்றும் திறன் விருத்தி செயலமர்வு!

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version