சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று (21.03) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில இடங்களில் 50 மி.மீ.க்கு மேல் அதிக மழை பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.