ஆசிரியர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் நிதி அமைச்சு, ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, மற்றும் காலி முகத்திடல் பகுதிக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் விதமாக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், பொது மக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி, அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்குமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் இடமாற்ற சபையை கலைக்குமாறு கோரி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் வெகுஜன அமைப்புகள் இணைந்து முன்னெடுக்கும் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலேயே கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.