தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் தனது 84 வது வயதில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இன்று (24.03) காலை 10 மணிக்கு இவரது உடல் தகனம் செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.