மனித உரிமைகள் பற்றிப் பேசுவதற்காக பைல்கள் நிறைந்த சூட்கேஸ்களுடன் ஜெனிவா சென்ற சிலர் இருந்ததை இன்று பலர் மறந்து விட்டனர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தான் தூதுவர்களைச் சந்தித்தது நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்திற்காகவுமே எனவும், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் மொட்டுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வந்த சிலரில் இன்று சுயாதீனமாக மாறியவர்களும் இதில் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ள உதவிகளையும் ஆதரவுகளையும் தடுக்க தாம் ஒருபோதும் எதனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்த எதிர்கட்சித் தலைவர், நாட்டின் ஜனநாயகம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டியதன் தேவைப்பாடு என்பவற்றை முன்னிலையாகக் கொண்டு, முழு நாட்டு மக்கள் சார்பாக தூதுவர்களிடம் தெரிவிக்கும் உரிமை தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-வலையொளி இணைப்பு-