கொழும்பைச் சுற்றியுள்ள 8 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வக நிலையங்களுக்கு எதிராக புதுக்கடை மற்றும் நுகேகொட நீதவான் நீதிமன்றங்கள் அபராதம் விதித்துள்ளன.
டெங்கு பரிசோதனை மற்றும் முழுமையான ரத்த பரிசோதனைக்கு பரிசோதனைக்கு அதிகபட்ச விலைக்கு மேல் நோயாளர்களிடம் கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக குறித்த மருத்துவ நிலையங்களுக்கு 55 இலட்சம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்ட 2186/17 வர்த்தமானி அறிவித்தலை மீறி, டெங்கு பரிசோதனைக்கு அறவிடப்படும் 1200 ரூபையை விட ரூ.3000 அதிகமாக அரவிடப்பட்டுள்ளது. மேலும் முழுமையான இரத்த பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையான 400 ரூபாவிற்கும் மேலாக கிட்டத்தட்ட 1000 ரூபா வரையில் கட்டணம் அரவிடப்படுவதாக கொழும்பு மாவட்ட சுற்றிவளைப்பு பிரிவினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.