எரிசக்தி துறை பிரதிநிதிகளுக்கு அமைச்சர் காஞ்சன வழங்கிய விருந்துபசாரம்!

இந்திய மற்றும் இலங்கை எரிசக்தி துறை பிரதிநிதிகளுக்கு விசேட விருந்துபசார நிகழ்வொன்று அமைச்சர் காஞ்சன தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் செயலாளர் HE பங்கஜ் ஜெயின், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் உயர் அதிகாரிகள் தலைமையிலான இந்திய எரிசக்தி துறை பிரதிநிதிகள் குழுவிற்கு நேற்று (24.03) மாலை மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சினால் விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்துபசாரத்தின்போது, EIL, IOC, Petronet, OVL, HPCL & LIOC ஆகியவற்றின் பிரதிநிதிகள் குழு, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, இலங்கை பெட்ரோலியம் சேமிப்பக முனையங்கள், டீஸ்டாவல்லி பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட், இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை மின்சார நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் முக்கிய சில விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version