பதுளை மாவட்டத்தின் பல்பொருள் அங்காடிகளில் நடத்தப்பட்ட தேடுதலில், பொதி செய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூர் அரிசிகளின் நிகர எடை குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
உள்ளுர் அரிசிப் பொதிகளில் இந்நிலைமை காணப்பட்ட போதிலும், இறக்குமதி செய்யப்படும் அரிசிப் பொதிகளின் எடையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என பதுளை மாவட்ட உதவி அளவீட்டு அலகு சேவை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை துறைமுகத்தில் அடைத்து வைக்கும் அதிகாரிகளுக்கு எதிராக மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து முதற் தொகுதியாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 2 மில்லியன் முட்டைகள் கடந்த வியாழகிழமை காலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.