கழிவகற்றல் குழியில் விழுந்து இருவர் பலி!

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் குழாய் அமைப்பில் பழுது பார்க்கும் பணியில் இன்று (27.03) பிற்பகல் ஈடுபட்டிருந்த இருவர் விஷ வாயுவை சுவாசித்ததால் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு மாநகரசபையில் பணியாற்றும் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பணியாளர் ஒருவர் மூச்சுத்திணறலுக்கு உட்பட்டிருந்த நிலையில் அவரைக் காப்பாற்ற இறங்கிய மற்றுமொரு நபரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கவலைக்கிடமான நிலையில் இருந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

Social Share

Leave a Reply