கச்சத்தீவில் புதிதாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்படவில்லை – கடற்படை!

கச்சத்தீவில் புனித அந்தோனியார் தேவாலயத்தைத் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத் தலங்களும் நிர்மாணிக்கப்படாது என கடற்படை ஊடகப் பிரிவு நேற்று (27.03) பிற்பகல் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

கச்சித்தீவில் மத வழிபாட்டுத் தலமொன்றை நிர்மாணிக்கும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டு வருவதாக வெளியான தகவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆள் நடமாட்டம் இல்லாத கச்சத்தீவுப் பாதுகாப்பிற்காகவும், பிரசித்திபெற்ற புனித அந்தோணியார் தேவாலயத்தின் பாதுகாப்பிற்காகவும் தாம் பாடுபடுவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த, விசேட கடற்படை துணைக் குழுவில் கடமையாற்றும் பெரும்பாலான மாலுமிகள் பௌத்தர்கள். இவர்களின் வழிபாட்டிற்காக அனுகந்தவில் உள்ள இராணுவ இல்லத்திற்கு அருகில் சிறிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதாகவும், கச்சத்தீவில் வேறெந்த வழிபாடு தளங்களும் அமைக்கப்படவில்லை எனவும் கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version